கொழந்தை சரிகா பொறந்து 8 மாதங்கள் ஓடியாச்சு!....கொழந்தை பொறந்தப்போ எடுத்த போட்டோவைப் பாத்தாக்க எனக்கே அடையாளம் தெரில....அவ்வளோ மாறுதல்கள் !!...படு சுட்டியா தினம் தினம் புதுசு புதுசா எதையாவது பண்ணி வியக்க வெக்கரா!!....அக்கா அத்திம்பேர் அம்மா அப்பா எல்லாரும் இதெல்லாம் பண்ணும்போது பக்கம் இல்லையேன்னு ஒரு பக்கம் ஓடினாலும் , போனாபோறது எல்லாரும் ஒரே வீட்ல இருக்க முடியாது வாழ்க்கை இப்பிடித் தான் ஓடும்....அவங்கவங்களுக்கு என்னென்ன வேலைகளோ, கடமைகளோ அதை அவங்க செய்யணும் நம்ம கூட வால் பிடிச்சுண்டே இருக்க முடியாதுங்கறது புரியறது....
இன்னிக்கு மார்கழி முதல் நாள்....இவ்வளோ நாள் பாப்பாவோட கொட்டத்துல காலையில தான் எனக்கு தூக்கமே ஆரம்பிக்கும் ....அப்படியும் இப்புடியுமா 8 மாசமா சூரிய உதயத்தை பார்க்கவே இல்லை.....No bad feelings....கொழந்தையோட நன்னா காலை தூக்கத்த ரசிச்சு தூங்கியாச்சு....ஆனா என்னிக்காவது முழிச்சுக்க தானே வேணும்.....என்னாடா ரொம்ப தூங்கரமேன்னு என்னோட லைட்டா குருகுருக்கற மனசையும் "தூங்கறது தப்பில்ல ...தூங்கிகிட்டே இருக்கறது தான் தப்பு" அப்படின்னு எங்க வீடு பெரிய அக்கா தட்டிக் கொடுத்துத் தூங்கப்பண்ணிட்டாங்க ....
பள்ளிப்பருவத்தில் காலை துயிலெழல் என்பது எவ்வளவு சந்தோஷமா கடைப்பிடிச்ச விஷயமாக இருந்தது. அதுவும் மார்கழின்னா கேக்கவே வேண்டாம்.....எதிர் வீட்டு மாட்டுக் கொட்டகையிலிருந்து சாணி எடுத்துட்டு வந்து நல்லா தண்ணியில கரைச்சு சூப்பரா தெளிச்சு.....நல்லா பதப்படுத்தின வாசல்ல கோலம் போட்டு....அந்த பனியில....நம்ம வீட்டுக் கோலத்த முடிச்சப்புறம் அப்படியே ஒரு rounds போய் எல்லார் வீட்டுக் கோலத்தையும் பாத்துட்டு....சிலுசிலுன்னு எப்படி இருக்கும்....

இந்த மார்கழி ஒண்ணுலேர்ந்தாவது கொஞ்சம் காலையில எழும்பனும்னு ஆசைப்பட்டேன்....மார்கழி 1க்கு எழுந்து சுமாரா பெரிசா கோலம் போட்டேன்...இங்க பெங்களூருல யாரும் காலையிலே எழுந்து கோலம் போடல்லாம் மாட்டாங்க....ஜல்பு புடிச்சுக்கும்...அதனால கம்பெனி எல்லாம் எதிர் பார்க்கக் கூடாது...
எல்லாருக்கும் இந்த மார்கழில குளிர குளிர நீராடி அந்த அரங்கத்துப் பெருமாள் நினைவுகளோட நல்ல பொழுது போகணும் ன்னு வேண்டிக்கறேன்....
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!