வயது ஏற ஏற உடல் வளர்ச்சி மன வளர்ச்சி இரண்டும் இன்றியமையாதது. உடலைப் பேண நாம் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி நம்மில் பலர் ஓரளவு விழிப்புணர்வுடன் செயல்படுகின்றோம்- ஜன்க் புட் எனப்படும் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவு வகைகளை தவிர்த்தல், முடிந்த வரையில் இயற்கை உணவு உட்கொள்ளுதல், யோகா போன்ற உடற்பயிற்சிகள், நடைபயிற்சி, முடிந்த வரையில் நம் வேலைகளை நாமே செய்து கொள்ளுதல் என நம் உடலை பாதுகாக்க வேண்டுவன செய்கிறோம் அல்லது செய்ய முயற்ச்சிக்கிறோம்.
மன நலம் காக்க உடல் நலம் பேணுவது அவசியம். உடல் ஆரோக்கியம் குறைந்து தவிக்கும் போது அதனுடன் போராடுவதே வாழ்க்கை என்றாகி விடும்.
சரி, வயது ஏற ஏற மனதின் ஆரோக்கியத்தைப் பேணுவதைப் பற்றி நாம் கவலைப்படுகின்றோமா?....சில வயதானவர்கள் மனதைப் பேணுகிறோம் என்ற பெயரில் வாழ்க்கையை வெறும் நகைச்சுவையாக்கி வெறும் சிற்றின்பத்தில் மனதை செலுத்துகின்றனர். தங்கள் வயதை மதிக்காமல் வாழ்க்கை நன்றாக அனுபவிப்பதற்கே என்று இளமைத் துள்ளளோடு வளைய வருவது வேதனையை தருகிறது. நாகரிகம் என்கிற போர்வையில் கலாச்சார சீரழிவுக்கு இவர்களே உடந்தையாக இருப்பது மிகவும் வருந்த வேண்டிய விஷயம்.
மன வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?...நம் வாழ்க்கையை நம்மால் இயன்ற வரையில் ஒரு கட்டுப்பாடுடன் வாழுதல்- ஒரு சிறு விஷயமாவது நம்மால் தினமும் கடைப்பிடிக்க முடிந்தால் அது பெரிய வெற்றி(குறிப்பிட்ட நேரத்தில் துயிலெழல் போன்றவை ), அன்றாடம் நமக்கு பிடித்தமான துறையில் ஏதேனும் கற்றல், அனுதினம் தெய்வ வழிபாடு, நல்ல இனிய இசையை கேட்டல், நல்ல நூல்களை வாசித்தல், செடி கொடிகள் பேணல், யாரையும் மனம் நோகும்படி செய்யாதிருத்தல், யாரிடமும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாதிருத்தல், நமக்கு கடவுள் அளித்துள்ள நல்ல விஷயங்களை எண்ணி நிறைவு கொள்ளுதல் (Count your positives), எளிமையான வாழ்க்கை வாழ்தல், நமது கலாச்சாரத்தை காக்கும் படி நடந்து கொள்ளுதல் என பல வழிகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
நாம் யார் என்கிற ஆத்ம ஞானம் பெற நமது வேதாந்த நூல்களை நல்ல ஆசிரியரிடம் கற்றல் நம் மனத்திற்கு ஆலமரமாய் பலம் தரும்.
எத்தனை ஆயிரம் அறிவை வளப்படுத்தும் நூல்கள் பொதிந்து கிடக்கின்றன.- திருக்குறள், பாரதியார் பாடல்கள், திருமூலர் திருமொழி, இராமாயணம் ,மகாபாரதம் ......எதைப்படிப்பது எதை விடுவது?...வாழ்நாள் போறாதே ....எத்தனை கோயில்கள், எத்தனை அழகிய கலாச்சாரம் நமது ...நினைக்கையில் மனம் ஆனந்தக் கூத்தாடும்.
நம் மனத்தை பேண நம் வாழ்கை அழகாக மலரும். எத்துனை கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் மனம் ஒரு நிலையில் நிதானதுடன் செயல்படும். எதையும் ஏற்றுக்கொள்ளும் படி மனம் பக்குவம் பெரும்.
எந்தன் உள்ள வெளியில் - ஞானத்
திரவி ஏற வேண்டும் ;
குன்றம் ஒத்த தோளும் - மேருக்
கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும் - நீ
எந்நாளும் ஈதல் வேண்டும்;
ஒன்றை விட்டு மற்றோர் - துயரில்
உழலும் நெஞ்சம் வேண்டா. - மகாகவி பாரதி.

No comments:
Post a Comment